உ.பி.யில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடி விகாஸ் துபே உஜ்ஜைன் கோவிலில் கைது

உத்தர பிரதேசத்தில் கான்பூர் அருகே பிக்ரு கிராமத்தில் இருந்த ரவுடி விகாஸ் துபேயை பிடிக்கச் சென்ற 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர். ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயம் அடைந்தனர்.

பின்னர் காட்டுக்குள் தப்பியோடிய விகாஷ் துபேயை 20 போலீஸ் குழுக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. உத்தர பிரதேசம், அரியானா, டெல்லி, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்நிலையில்வு பிஜ்னூர் பகுதியில் விகாஸ் துபே இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அங்கு சென்றனர்.அதற்கு முன்னதாகவே விகாஸ் துபே தப்பிச் சென்றுவிட்ட நிலையில், அவரது நெருங்கிய கூட்டாளி அமர் துபேயை சுற்றிவளைத்த போலீசார், என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில் தப்பி ஓடிய ரவுடி விகாஸ் துபேவை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர்.

போலீசாரின் 5 நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு இன்று காலை மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் விகாஸ் துபே சிக்கினான். உஜ்ஜைன் மகாகாளி கோவிலில் இருந்து வெளியேறிய விகாஸ் துபேயை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது, விகாஸ் துபே கோபத்தில் ‘நான் கான்பூர் விகாஸ் துபே’ என்று கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விகாஸ் துபே போலீசில் சிக்காமல், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் வகையில், அவனுக்கு தொடர்ந்து உதவி செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top