சாத்தான்குளம் கொலை வழக்கு; காவலர்கள் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறை சிறையில் விசாரணை என்ற பெயரில் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை மதுரை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்து கொண்டது, பின் சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டது, இதை தொடர்ந்து சிபிசிஐடி விசாரணையில் கொலை வழக்கு பதிவு செய்து 5 போலீசாரை கைது செய்து சிறையில் அடைத்தது.

தமிழக அரசு தலையிட்டு, மத்திய அரசின் உத்தரவின் கீழ் சிபிஐ-யும் இரு வழக்குப்பதிவை செய்துள்ளது. இன்னும் சில தினங்களில் சிபிஐ தனது விசாரணையை தொடங்கும் என்று தெரிகிறது.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜா உள்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 8 போலீசார் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு காணொலி வாயிலாக விரைவில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை 13-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top