திருச்சி தனியார் மையத்தில் கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள்

வேகமாக பரவிவரும் கொரோனவை கட்டுப்படுத்த தற்போது உள்ள ஒரே நடவடிக்கை தொற்று உள்ளவர்களை பரிசோதித்து அவர்களை தனிமை படுத்துவது. அதிக பரிசோதனைகள் கட்டுப்படுத்த உதவும் என்று உலக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள அரசு மருத்துவமனைகளுடன் தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வகங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலே சிறந்த மருத்துவ கட்டமைப்பு கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் தான் அதிகளவு பரிசோதனை மையங்கள் இயங்கிவரும் நிலையில், திருச்சியில் உள்ள ஒரு தனியார் மையத்தில் தவறான பரிசோதனை முடிவுகள் வழங்கப்பட்டுள்ளன.

திருச்சி மாநகரின் புத்தூர் நான்கு ரோடு பகுதியிலுள்ள தனியார் பரிசோதனை மையமான டாக்டர் டயக்னோஸ்டிக் சென்டர்க்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அங்கு எடுக்கப்படும் பரிசோதனையில் தவறான முடிவுகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் நகர் நல அலுவலர் ஆய்வு செய்து விசாரணை செய்ததில், பலருக்கு முரணான பரிசோதனை முடிவுகளை அந்த மையம் வழங்கியது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து, தற்காலிகமாக அந்த மையத்தில் கொரோனா பரிசோதனைக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து அங்கு கொரோனா பரிசோதனைகள் செய்தது நிறுத்தப்பட்டது.

இந்த செய்தியால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்கள் மீண்டும் தங்களை பரிசோதனைக்கு உள்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்களால் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று பரவி இருக்குமோ என்ற ஆட்சம் ஏற்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top