தமிழகத்தில் டிவி மூலமாகவே பாடம், ஆன்லைனில் அல்ல – அமைச்சர் செங்கோட்டையன்

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுத வேண்டும் என்ற அரசின் முடிவுக்கு பல தரப்பினர் இடையே கேள்வியும் அச்சமும் நிலவி வருகிறது. குறிப்பாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு தற்போது தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா நோய் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இந்த சூழலில் தேர்வு எழுதும் மாணவர்களின் பாதுகாப்பு என்ன என்ற அளவிற்கு பெற்றோர்கள் கவலையில் உள்ளனர்.

இந்நிலையில், இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; டி.வி. மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும். பிளஸ்-2வில் எஞ்சிய ஒரு தேர்வை எழுதாத மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது.

12-ம் வகுப்பில் 718 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். விண்ணப்பிக்காத 34,812 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால் எழுதலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அரசு பள்ளிகளில் வரும் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில் இன்று விளக்கம் அளித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top