கொந்தகையில் மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு; 6-ம் கட்ட அகழ்வாய்வில் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகளில் 6-ம் கட்ட அகழாய்வு பணி நடந்துவருகிறது.

இந்த நிலையில் கொந்தகையில் நேற்று நடந்த அகழாய்வு பணியில் இரண்டாவது குழந்தையின் முழு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. நிலத்தில் இருந்து ஒரு மீட்டர் ஆழத்தில் இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது அதுவும் சென்றா மாதம் ஜூன் 19 தேதி கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையின் எலும்புக்கூடு அருகிலே இந்த எலும்புக்கூடும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம், தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் எலும்புக்கூட்டினை சேதாரம் இல்லாமல் முழுமையாக தோண்டி எடுத்து சுத்தம் செய்தனர். அதன் அளவை கணக்கிடும்போது 95 செ.மீ. உயர குழந்தையின் எலும்புக்கூடு என்பது தெரியவந்தது.

இந்த இடத்தில் கிடைத்த மேற்பரப்பில் அடக்கம் செய்யப்பட்ட முதல் எலும்புக்கூடு இதுவாகும் என்று தெரிவித்தனர். இதன் தலை பகுதி மட்டும் 20 செ.மீ. இருக்கும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த குழந்தையின் எலும்புக் கூடு கிடைத்த இடத்தின் அருகே கடந்த மாதம் 75 செ.மீ. உயரம் உள்ள குழந்தையின் எழும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.

இந்த எலும்புக்கூடை சிதையாமல் எடுக்க 10 நாட்கள் ஆனதாகவும், இதற்கான காரணம் நேர் வெயிலில் இந்த எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்டால் அதன் மரபணு மாதிரிகள் அழிந்து போய்விடும் என்பதால் காலை 6 மணி முதல் 7 மணி வரையும் பின் மாலை 5.30 மணி முதல் மாலை 7 மணி வரையான வெயில் இல்லாத காலஅளவினை பயன்படுத்தி இந்த எலும்புக்கூட்டை சிதையாமலும், மரபணு மாதிரிகள் அழிந்துவிடாமலும் எடுத்துள்ளனர்.

தற்போது எலும்புக்கூட்டில் இருந்து மரபணு மாதிரிகளை சேகரித்து அதை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி ஆய்வுசெய்ய உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top