பிரபல Netfilx- OTT தளத்துக்கு வரவுள்ள வெற்றிமாறன் படம், ஜாதிய ஆணவக்கொலை பற்றியதா?

தமிழ் சினிமா இயக்குனர்கள் வெற்றிமாறன், கவுதம் வாசுதேவ், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் அனைவரும் இணைந்து தற்போது பிரபல OTT தளமான Netfilx-க்கு Anthology திரைப்படத்தை இயக்கி வருகின்றனர்.

அமெரிக்காவின் Netfilx OTT தளம் தொடர்ந்து இந்தியாவின் பாலிவுட்டில் வெப் தொடர்கள் (webseries) மற்றும் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. தற்போது Netfilx நிறுவனம் தனது மார்க்கெட்டை விரிவுபடுத்த இந்தியாவின் பல்வேறு மணிலா மொழிகளில் படங்களை தயாரித்து வெளியிட முடிவு செய்து கார்கள் வேலைகளை துவங்கிவிட்டது.

இதில் தமிழ் முன்னணி இயக்குனர்களான வெற்றிமாறன், கவுதம் வாசுதேவ், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் இவர்கள் அனைவரும் இந்தியாவின், தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொடூரமான மனிதாபிமானம் இல்லாத ஜாதிய ஆணவக்கொலையை மைய படுத்திய கதைக்களத்தை தேர்வு செய்து அதை படமாக உருவாகிவருகின்றனர்.

இந்த Anthology திரைப்படம் பிரபல OTT தளமான Netfilx-ல் வரும் செப்டம்பர் (september) ஒளிபரவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது ஒரு Anthology திரைப்படம் என்பதால் தனித்தனியாக கதையை உருவாக்கியுள்ளனர்.

மேலும் அதில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

  1. நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் சாய்பல்லவி இருவரும் இயக்குனர் வெற்றிமாறன் எபிசொட்டில் நடிக்கின்றனர்.
  2. நடிகர்கள் சாந்தனு மற்றும் காளிதாஸ் இயக்குனர் சுதா கொங்கராவின் எபிசொட்டில் நடிக்கதுள்ளனர்.
  3. நடிகைகள் அஞ்சலி மற்றும் கல்கி இருவரும் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நடித்துள்ளனர்.
  4. நடிகர் அஸ்வின் காகுமானு இயக்குனர் கவுதம் வாசுதேவ் இயக்கத்தில் நடித்துள்ளார்.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top