ஒரே நாளில் சென்னையில் கொரோனாவுக்கு 28 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் அணைத்து மாநிலங்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

சென்னையில் 71 ஆயிரத்து 230 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். கொரோனாவுக்கு சென்னையில் நேற்றுவரை 1,120 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி சென்னையில் கொரோனாவுக்கு 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 6 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 7 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 5 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் 4 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top