சாத்தான்குளம் லாக்அப் கொலை – மேலும் 5 போலீசாரை கைது செய்த சிபிசிஐடி

சாத்தான்குளம் தந்தை மகன் அழைத்து செல்லப்பட்டு போலீசாரால் லாக்அப் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் சம்பவத்தின் போது காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

இதற்க்கு முன்னர் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, கைது செய்யப்பட்ட எஸ்.ஐ. ரகு கணேஷ், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தான்குளத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை , காவலர்கள் வேல்துரை, தாமஸ், சாமத்துரை, வெயிலுமுத்து ஆகியோரிடம் விசாரணை நடத்திய பின்னர், சிபிசிஐடி போலீசார் ஐந்து பேரையும் கைது செய்தனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேருடன் தற்போது வரை 10 காவலர்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்க சிபிஐ ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top