கொரோனாவிற்கு முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா!!

பிரேசில் நாட்டு அதிபராக இருப்பவர் ஜெய்ர் போல்சோனாரோ. இவர் தீவிர வலதுசாரி மதவாத கொள்கைகொண்டவர் அமெரிக்காவின் பல மறைமுகமான உதவியால் பிரேசிலின் அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டவர். இவர் குடியரசு தலைவராக ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து இவரின் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கையால் மக்கள் பெரும் பாதிக்கப்பட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரசால் உலகமே அச்சத்தில் இருக்கும் போது மக்கள் சமூக விலகல், முகக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என்று பிரசாரம் செய்தார்.

மக்கள் லாக்டவுனில் வீட்டுக்குள் முடங்கி இருந்தால், கொரோனா ஏற்படுத்தும் பாதிப்பைவிட மோசமான பாதிப்பு பொருளாதார முடக்கத்தால் ஏற்படும். மக்கள் வெளியே வந்து சுதந்திரமாக பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுங்கள் என தொடர்ந்து போல்சனாரோ பேசியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இவருக்கு முன்பே இந்த பிரச்சாரத்தை தான் மேற்கொண்டார். இதன் விளைவு அமெரிக்கா கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாகும் மேலும் உலகத்திலே அதிக உயிரிழப்பை சந்தித்த நாடும்கூட.

அதுமட்டுமல்லாமல் அதிபர் போல்சனாரோவும் வெளியே சென்றால் முகக்கவசத்தை அணிவதில்லை. இந்நிலையில் போல்சோனாரோ கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டது. மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். வெளியில் வரும்போது என்னுடைய நுரையீரல் சுத்தமாக உள்ளது என்று கூறினார்.

இந்நிலையில் கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு பாசிட்டிவ் என வந்துள்ளது. அவருக்கு லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாக அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

இவரின் மோசமான கொள்கையால் பிரேசில் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. உலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவுக்கு பிறகு இரண்டாவது இடத்தில உள்ளது பிரேசில். இதனை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top