காய்ச்சல் முகாம் மூலம் சென்னையில் 10,463 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது!!

சென்னையில் மட்டும் ஜூலை 6ம் தேதி வரை 70,017 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 44,882 பேர் குணமடைந்துள்ள நிலையில், 24,052 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1082 பேர் உயிழைந்துள்ளனர்.

சென்னையில், மே மாதம் முதல் வேகமாக அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கொரோனா சமுகப்பரவலாக மாறவில்லை என்று அரசு தொடர்ந்து தெரிவித்துவருகிறது.

இதனொரு பகுதியாக சென்னையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நேரடியாக பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது.

சராசரியாக தினமும் 500க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்படுகிறது. கடந்த மே 8 முதல் ஜூலை 6ம் தேதி வரை 13,212 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில், 8.5 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களில் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் உள்ள 40,175 பேர் கண்டறியப்பட்டனர்.

இதில் ராயபுரம், தண்டையாபேட்டை உள்ளிட்ட பாதிப்பு அதிகம் உள்ள மண்டலங்களில் கொரோனா அதிக பரிசோதனை செய்யப்பட்டு 10,463 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மக்களிடம் வசிப்பிடங்களுக்கு நேரடியாக சென்று காய்ச்சல் முகாம் மூலம் சோதனை செய்ததின் மூலம் லேசான அறிகுறி உள்ள போதே 10,463 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், லேசான அறிகுறி இருந்தே போத தொற்று கண்டறியப்பட்டதால், இவர்களிடம் இருந்து நோய் பரவுவது தடுக்கப்பட்டு உள்ளதாகவும், பொதுமக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் காய்ச்சல் முகாம்களில் அறிகுறி இருந்தால் உடனடியாக வந்து பரிசோதித்து கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இந்த முகாம்களின் எண்ணிக்கையும், பரிசோதனை எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top