எல்லையில் முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என இந்தியா வலியுறுத்து ஏன்? – ராகுல் காந்தி கேள்வி

லடாக்-கல்வான் இந்திய-சீன எல்லையில் சீனாவுடனான எல்லை மோதல் குறித்து பிரதமர் மோடி ஏன் சீனாவிடம் வலுவான எதிர்ப்பை காட்டத்தயங்குகிறார் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:-

தேச நலனை காப்பது இந்திய அரசின் தலையாய கடமை.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து சீனா தனது துருப்புக்களை திரும்பப் பெற்றது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில்,

கால்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில், முன்பிருந்த இருந்த நிலையே தொடர வேண்டும் என ஏன் இந்தியா வலியுறுத்தவில்லை?

நமது மண்ணில் ஊடுருவி, ஆயுதங்களற்ற 20 இந்திய ராணுவ வீரர்களை படுகொலை செய்ததை சீனாவை, தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்?

கால்வான் பள்ளத்தாக்கின் இறையாண்மை பற்றிய தெளிவான தகவல் இடம்பெறாதது ஏன்?

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top