குப்பை கொட்ட சென்ற சிறுமி சடலமாக மீட்பு – திருச்சியில் பயங்கரம்

திருச்சி மாவட்டம் அதவத்தூர் பாளையம் பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும், 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள முள்ளுக்காட்டில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து சோமரசம்பேட்டை காவல் ஆதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

நேற்று மதியம் குப்பை கொட்டுவதற்காக சென்ற மாணவி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது. சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அப்பகுதி பொதுமக்கள் இந்த சம்பவத்தை கண்டித்தும் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது என்று திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர், சரக டிஐஜி ஆனி விஜயா நேரில் சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்திவிட்டு இதை தெரிவித்தார். மாணவி எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் திருச்சியையே பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

மாவட்ட எஸ்.பி தலைமையிலான படையினர், சிறுமியின் சடலம் குறித்து போலீசுக்கு தகவல் அளித்த இருவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு, சிறுமியின் தந்தையும் வந்துள்ளார்.

வழக்கமாக குப்பைக் கொட்டும் இடத்திற்குத்தான் எனது மகள் குப்பை கொட்ட சென்றார். வீட்டிற்கு வரவில்லையே என்று போய் பார்த்ததும் இப்படி சடலமாக கிடைத்துள்ளாள். வீட்டிலும் பிரச்சினை இல்லை. யார் மீதும் சந்தேகமில்லை என்று அவர் கூறியுள்ளார்.

பிரேத பரிசோதனை முடிவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா அல்லது வேறு காரணங்களுக்காக கொல்லப்பட்டாரா என்பது தெரிய வரும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top