சாத்தான்குளம் “லாக்அப்” கொலைவழக்கு – சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம்

சாத்தான்குளத்தில் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு காவல்நிலைய சிறையிலே கொல்லப்பட்ட தந்தை, மகன் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, இதுவரை 5 காவலர்களை கொலைவழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது.
சிபிசிஐடி போலீசாரே விசாரணையை தொடர வேண்டும் என்று பல அரசியல் இயக்கங்கள் மற்றும் கட்சிகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் காவலச்சிறை கொலை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை சிபிஐ ஏற்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

சாத்தான்குளம் வழக்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லி நீர்த்துப்போக செய்யப்படும் என பரவலாக பேசப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை தலையிட்டதால் கொலை வழக்கு பதிவு, கைது என நீண்டிருக்கிறது.

இதற்கு காரணமான அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோருக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்தது மட்டும் இல்லாமல் நீதியின் மேல் மக்களுக்கு ஒரு அளவிற்கு நம்பிக்கை கூடியது.

இந்நிலையில், நீதிபதி பி.என்.பிரகாஷ் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக நீதிபதி எம்.சத்தியநாராயணன் நிர்வாக நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாற்றப்பட்ட சில நாட்களிலே சாத்தான்குளம் கொலை வழக்கு சிபி-க்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top