கொரோனா வைரஸ் பாதிப்பு, விசாரணை நடத்த சீனா விரைகிறது உலக சுகாதார நிறுவனம்

உலகில் கொரோனாவில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 11 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,29,000-ஐத் தாண்டியுள்ளது. கொரோனா பரவல் குறித்த தகவல்களை சீனா மறைத்து விட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டின. சீனாவில் கொரோனா பரவுவதற்கு அமெரிக்கா தான் காரணம் என்றும் கூறிவருகிறது.

கொரோனா குறித்த தகவல்களை தெரிவிக்கவும், எச்சரிக்கவும் சீனா தவறி விட்டதாகவும் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து முழுமையாக ஆய்வுசெய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும், வைரஸ் ஆரம்ப நிலைகுறித்து கட்டாயம் ஆராயப்பட வேண்டும் என தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த அறிவியலாளர்களில் ஒருவரான சவுமியா சுவாமிநாதன், இதற்கான குழு அடுத்த வாரம் சீனா செல்வதாகவும் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று எங்கு எப்படி ஆரம்பித்தது என்று சீராக தெரியவில்லை என்றும், கொரோனா வைரஸ் வவ்வால்களிடம் காணப்படும் வைரஸ்களை ஒத்திருப்பதாகவும், வவ்வால்களிடம் பல்வேறு வகையிலான கொரோனா தொற்றுகள் இருப்பது தெற்காசிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. சுமார் 500க்கும் மேற்பட்ட வகையான கொரோனா வைரஸ் உள்ளதாகவும் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

பன்னாட்டு ஆராய்ச்சி வல்லுநர்களை உள்ளடக்கிய இந்த குழு, கொரோனா தொற்று உருவானது எப்படி என்றும், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு எங்கு எப்போது பரவத் தொடங்கியது என்பது குறித்தும் ஆய்வு செய்ய உள்ளது.

இதனிடையே, கொரோனா குறித்த தகவலை தனது இணையபக்கத்தில் புதுப்பித்துள்ள உலக சுகாதார நிறுவனம், ஊஹானில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் மண்டல அலுவலகம் தான் முதல்முறையாக அதாவது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி, அறியப்படாத காரணம் மூலம் நிமோனியா பரவுவதாக தெரிவித்தாக குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் குறித்து அதுவரை சீனா எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top