சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் கொலைசெய்யப்பட்டனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இவ்வழக்கு தொடர்பாக உயிரிழந்த ஜெயராஜ் வீடு, கடைகளில் ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்யப்பட்டது. இந்த விசாரணையில் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் நடந்த அன்று சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றி பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை விசாரிப்போம் என சிபிசிஐடி ஜஜி சங்கர் தெரிவித்தார்.

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவில் உள்ளவர்கள் லத்தியை கையில் பிடிக்கவே சட்டத்தில் இடமில்லாத போது அதைக் கொண்டு தாக்குதலில் ஈடுபடுவது எந்த வகையில் நியாயம் எனக் கேட்கிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பரந்தாமன்.

இதனையடுத்து, ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்குத் தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்த நிலையில், “போலீஸுக்கான அதிகாரங்கள் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸுக்கு இல்லை” என்று காவல் துறை தரப்பு விளக்கம் அளித்தது.

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமூக பணிபணிகளில் ஈடுபடும் போதும் பொதுமக்கள் இடம் அத்துமீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், சமுகப்பணிகளில் மட்டுமே பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயன்படுத்தப்படுவார்கள் என்று எஸ்.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மார்த்தாண்டம் காவல்நிலைய பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இளைஞர்கள் தாக்கியதில், கூலி தொழிலாளி ஒருவர் இறந்த விவகாரத்தை போலீசார் மூடி மறைக்க முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top