சாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி காட்சிகளை தானாக அழியும் படி யார் செய்தது?

சாத்தான்குளம் காவல்நிலையத்தின் தந்தை, மகன் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட போது பதிவான சிசிடிவி காட்சிகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்ததாகவும், நாள்தோறும் சிசிடிவி காட்சிகள் தானாக அழியும் வகையில் செட்டிங்ஸ் செய்யப்பட்டுள்ளதாகாவும், நீதித்துறை நடுவர் பாரதிதாசன் அறிக்கை அளித்திருந்தார்.

இது தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 6 மாதமாகவே தொழில்நுட்பப் பிரிவு பதவிகள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது, மேலும் அந்த பொறுப்பில் தற்போது வரை யாரும் அமர்த்தப்படாமலே காலம் கடத்தி இருக்கின்றனர். டிஜிபி அலுவலக உத்தரவுப்படி, குறைந்தபட்சம் 15 நாட்களின் சிசிடிவி காட்சிகளை அழிக்கக் கூடாது என்ற நிலையில், பிப்ரவரி மாதமே சிசிடிவி கேமராவில் செட்டிங்ஸ் மாற்றப்பட்டதை கண்டறியப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவாகிய காட்சிகளை சாத்தான்குளம் போலீஸார் திட்டமிட்டு அழித்துள்ளனர். ஆதாரங்களை அழிப்பதற்கு காவல்துறையே துணிவோடு திட்டமிட்டு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சிசிடிவியில் நாள்தோறும் காட்சிகள் அழியும் வகையில் செட்டிங்ஸ் செய்தது யார் என சிபிசிஐடி சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காவல்நிலையத்தின் சிசிடிவி யார் கட்டுப்பாட்டில் இருந்தது என்றும் விசாரித்து வருகின்றனர்.

மேலும், காவல்துறையினரால் அழிக்கப்பட்ட சிசிடிவியில் பதிவான காட்சிகளை மீண்டும் மீட்டு எடுக்க தொழில்நுட்ப வல்லுநர் குழு வேலைசெய்து வருகிறது.

இதனிடையே, வழக்கில் இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து சிபிசிஐடி போலீசாருடன், ஐஜி சங்கர் ஆலோசனை நடத்தினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top