கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா – 3-வது இடத்தை நோக்கி இந்தியா

இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்த கொன்டே இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 24,850 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 6,73,165 ஆக உயர்ந்துள்ளது.

3-வது இடத்தில் இருக்கும் ரஷியாவை இந்தியா நெருங்குகிறது. 6,74,515 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யா உலக அளவில் 3-வது இடத்தில உள்ளது. பிரேசில் 15,78,376 எண்ணிக்கையுடன் 2-வது இடத்தில் உள்ளது. 29,35,770 எண்ணிக்கையுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

இந்தியாவில் 613 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 19,268 ஆக உயர்ந்துள்ளது. 2,44,814 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 4,09,083 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கண்டறிந்து அவர்களை விரைவாக தனிமை படுத்தி பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஒவ்வொரு மாநிலங்களும் பரிசோதனைகளை அதிகரிக்க தொடங்கியுள்ளன. நேற்று மட்டும் இந்தியா முழுவதும் 2,48,934 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை 97,89,066 மாதரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top