கர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா – எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு

கர்நாடாக மாநிலத்தில் மார்ச் 27-ம் தேதி முதல் ஏப்ரல் 9-ம் தேதிவரை திட்டமிடப்பட்டிருந்த பத்தாம் வகுப்புத் தேர்வு கொரோனா நோய் தொற்று பாதிப்பின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவந்தநிலையில், பல மாநிலங்கள் 10-ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து அறிவித்தன.

ஆனால், பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாஜக தலைமையிலான எடியூரப்பா அரசு கர்நாடகாவில் பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்தியது. மாணவர்களின் பெற்றோர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேர்வை நடத்தினர்.

ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதிவரை பத்தாம் வகுப்புத் தேர்வு நடைபெற்றது. இதுதொடர்பாக கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘7.60 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதியுள்ளனர். அதில், 14,745 பேர் தேர்வு எழுதவரவில்லை. 3,911 பேர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் தேர்வு எழுதவரவில்லை. 863 பேர் உடல்நிலை சரியில்லாததால் தேர்வு எழுதவரவில்லை.

நேற்று, பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பை மீறி பொதுத்தேர்வு நடத்திய பாஜகவின் எடியூரப்பா அரசு, இப்போது மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் பெற்றோர்கள் கலக்கமடைந்துள்ளனர். எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை கையில் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top