தமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்குகள் செயல்படாது; முழு ஊரடங்கு

தமிழகத்தில் காட்டுத்தீபோல் அதிகரித்துவரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஜூலை 31-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டித்துள்ளது அரசு. அதில், ஜூலை மாதம் வரும் நான்கு ஞாயிற்றுகிழமைகளிலும் எந்த தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் அத்தியாவசிய கடைகளுக்குக் கூட அனுமதி கிடையாது.

இந்தநிலையில், தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

‘தமிழக அரசு ஐந்தாவது முறையாக கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கினையும் ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுடன் கூடிய ஊரடங்கு உத்தரவினை நீட்டித்துள்ளது.

இதில் இம்மாதத்தில் உள்ள நான்கு (05 ,12,19,26, ஆகிய தேதியில்) ஞாயிற்றுகிழமைகளிலும் தமிழகம் முழுவதும் தளர்வற்ற முழு ஊரடங்கு உத்தரவை சனிக்கிழமை இரவு 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிவரை பிறப்பித்துள்ளது.

எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்களும் இன்று சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை பொதுமக்களுக்கான பெட்ரோல் டீசல் விற்பனையினை தமிழக அரசின் ஆணையின்படி வழங்குவது இல்லை என்பதனை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றது.

என்று தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top