சாதிய கூட்டுசக்தி சனாதனிகளை அச்சுறுத்தும் நாள் இது, காதல் வெல்லும் – திருமாவளவன்

இளவரசன், பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த திவ்யா இருவரும் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். இதன் பின் இளவரசன் உடல் இறந்த நிலையில் கண்டஎடுக்கப்பட்ட நாள் இன்று.

கடந்த 2012-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் தருமபுரியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளவரசன், பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த திவ்யா இருவரும் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு, சில நாட்களில் திவ்யாவின் அப்பா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

காதல் திருமணம் இரு குடும்பங்களுக்கும் இடையிலான பிரச்சனை, சமூகங்களுக்கு இடையிலான பிரச்சனையாக மாறி பட்டியலினத்தவர்கள் வாழும் நாயக்கன்கொட்டாய் பகுதியில் வன்முறை நடத்தப்பட்டது. இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாயின. மனைவி திவ்யாவின் குடும்பத்துக்கும் இளவரசனுக்கும் இடையில், சட்ட ரீதியாக வாதங்கள் நடந்துவந்த நிலையில். இளவரசனின் உடல் காயங்களுடன் ரயில் தண்டவாளத்தில் வீசி செயல்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதன் பின், இது கொலை அல்ல தற்கொலைதான் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த சாதிய கொடுமைகளுக்கு இறந்த இளவரசன் குறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர், தொல்.திருமாவளவன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :

சாதிப்பித்தர்களின் கூட்டுச்சதிக்கு #இளவரசன் பலியான நாள்.நாடக அரசியலுக்காக இளவரசனை நரபலி கொடுத்து திவ்யாவை நடுத்தெருவில் விட்ட சனாதனிகளை அச்சுறுத்தும் நாள்.சாதிவரம்புகளைத் தாண்டி தன்மீது நம்பிக்கை வைத்த திவ்யாவுக்காக தனது இன்னுயிரைப் பறிகொடுத்த இளைஞனின் நினைவுநாள். காதல்வெல்லும்!

இதை தொடர்ந்து,மேலும் சாத்தான்குளம் தந்தை மக்கன் காவல்துறை சிறையில் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம் குறித்தும் பேசியுள்ளார்.

ஊடகவியலாளர்களைக் குறிவைக்கும் சனாதனிகள். தமிழகத்தில் பரவும் சனாதனப் பயங்கரவாதம். சாத்தான்குளம் கவளத்தை படுகொலைக்கு #கிறித்துவவெறுப்பைக் கக்கிய சனாதனிகளின் ஊடுருவல் காரணமென சொல்லப்படுகிறது. எனவே, அரசு இப்போக்கை அலட்சியப் படுத்திவிடக் கூடாது. #சனாதனம்எச்சரிக்கை!?! @CMOTamilNadu


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top