மக்கள் பயன்படுத்தும் இந்திய ரயில்வே துறையை தனியாருக்கு விற்கும் மோடி அரசு;

இந்திய ரெயில்வேதுறை அதிகமான தொழிலாளர்களை கொண்ட அரசு பொதுசேவை துறையாகும். 12,18, 355 தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அது மட்டும் இன்றி இந்தியாவில் மக்கள் அதிகமாக நம்பி இருக்கும் போக்குவரத்து ரயில்வே துறை தான். இந்தியாவின் மிக அதிகமான லாபம்தரக்கூடிய துறை இதுவாகும். இந்த துறையை தற்போது மோடி அரசு தனியாருக்கு விற்று உள்ளது.

சுமார் 100 கோடிக்கு மேற்பட்டோர் இந்த ரயில்வே துறையை பயன்படுத்தி வருகின்றனர் காரணம் அரசு கட்டுப்பாட்டில் இயங்குவதால் பயணச்சீட்டின் விலை நியாமான முறைக்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் பிரதான போக்குவரத்தாக திகழும் ரயிலில், ஒரு நாளைக்கு பல கோடி பேர் பயணம் செய்கின்றனர். அதோடு பெரும்பாலான சரக்கு போக்குவரத்தும் ரயில்கள் மூலமே நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்திய ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.2 லட்சம் கோடி வரை வருவாய் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. ரயில்வே சேவையை பயன்படுத்துவோர் 90% சதவீதம் பேர் சாமானிய மக்கள் அவர்கள்.

இந்நிலையில், அரசு கடந்த டிசம்பர் மதம் அதாவது கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னரே இந்தியாவில் உள்ள 100 ரயில்வே பாதைகள், 150 ரயில்களை தேர்வு செய்து தனியார் நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்து விட்டது. பயணிகள் ரயில்களின் அரசு அனுமதியோடு தனியார் நிறுவனங்கள் 30,000 கோடி முதலீடு செய்துள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் கூறியுள்ளார். இந்திய ரயில்வே துரையிலையே இதுவே முதல் முறை பயணிகள் ரயில்களை தனியாருக்கு விற்கப்படுகிறது.

ரயில்வே துறை இது குறித்து கூறும்பொழுது, ” தனியார் நிறுவனங்களே பயணிகளின் கட்டணத்தை முடிவு செய்யும், ரயில்களின் பாதுகாப்பு மற்றும் ரயில்களின் நேர நேர அட்டவணையை அரசு ரயில்வே துறை முடிவு செய்யும்” என்று தெரிவித்துள்ளது.

தற்போது 109 ஊர்களுக்கான 100 வழித்தடங்களை, 150 ரயில்களை அரசு கட்டுப்பாட்டில் உள்ள இந்திய ரயில்வே துறை தனியார் நிறுவனங்களின் முதலீடோடு அவர்களுக்கு விற்கப்படுகிறது. மோடி அரசு வரும் களங்களில் ரயில்வே துறை முற்றிலும் தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top