சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் போலீசாரால் “லாக்அப்” கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கில் தொடர்புடைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பால கிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்து கொலைவழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய காவலர் முத்துராஜுக்கு தலைமறைவு ஆனார், இவரை வலைவீசி சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். விளாத்திகுளத்தை அடுத்த கீழமங்களம் என்னுமிடத்தில் முத்துராஜின் இரு சக்கரவாகனம் மட்டும் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர் வழக்கறிஞர் ஒருவருடன் செல்போனில் பேசியது தெரியவந்தது.

இதையடுத்து செல்போன் சிக்னல் மூலம் அவரை தேடிய சிபிசிஐடி போலீசார், பூசனூர் கிராமத்தில் காவலர் முத்துராஜ் பதுங்கிருப்பதை அறிந்து கைது செய்தனர். இதன் பின்னர் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்திற்கு முத்துராஜை அழைத்து சென்று போலீசார் விசாரணையை தொடங்கினர்.

ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பால கிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5-து பேர் மீது கொலை, ஆதாரங்களை அழித்தல் மற்றும் தவறாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த குற்றம் என்று மூன்று பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top