கொரோனா – நேற்று ஒரே நாளில் 20,093 பாதிப்பு; தினம் உச்சத்தை தொடும் எண்ணிக்கை

நேற்று இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,093-ஆக இருந்தது. இதுவரையில் பாதிக்கப்பட்டவர்களின் விகிதத்தின் மிக அதிகமான எண்ணிக்கையாக இது கருதப்படுகிறது. இந்த பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

6, 27,000 மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், இதுவரை 3, 79,900 பேர் இதுவரை குணமடைந்திருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைதல் சதவிகிதம் 60.73% ஆக இருப்பதாக நேற்றைய நிலவரத்தின்படி, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,213-ஆக இருப்பதாகவும் சுகாதார அமைச்சகத்தின் வலைதளம் தெரிவித்திருக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top