திருப்பதி கோவிலில் அர்ச்சகர் உட்பட 10 பேருக்கு கொரோனா உறுதி

திருப்பதி கோவிலில் கொரோனா நோய் தொற்று அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம், கோவிலில் நடக்கும் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதையடுத்து கடந்த மாதம் 11-ந்தேதி முதல் திருப்பதி கோவிலுக்குள் தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் 12,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் திருப்பதி கோவிலில் அர்ச்சகர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தேவஸ்தான ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து நாளை தேவஸ்தானம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது தகவல் வெளியாகியுள்ளது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

ஏழுமலையானை வழிபட ஆன்லைன் மூலம் 9300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள், இலவச தரிசனத்திற்காக மூன்றாயிரம் டோக்கன்கள் வழங்கப்படும் நிலையில் டிக்கெட் விநியோகம், தரிசனம் நடைமுறைகள் ஆகியவற்றில் மாற்றங்களை கொண்டு வருவது பற்றி தேவஸ்தான அறங்காவலர் குழு ஆலோசனை செய்து சூழ்நிலைக்கு ஏற்ற மாற்றங்களை கொண்டுவர இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், தினமும் 12,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில். தரிசனம் செய்ய வந்த இவர்களுக்கு நோய் தோற்று ஏற்பட்டதா என்பது தெரியவில்லை, அவர்களை கண்கணிப்பு வலயத்திற்குள் கொண்டு வரப்படுவார்களா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர் உட்பட 10 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top