2036 வரை ரஷ்யாவின் அதிபராக நீடிக்க போகும் புதின்; சட்டத்திருத்தத்திற்கு மக்கள் ஆதரவு

ரஷ்யாவின் அரசியல் சாசனப்படி அந்நாட்டில் இருமுறைக்கு மேல் ஒருவர் அதிபர் பதவியை வகிக்க முடியாது. கடந்த 2012 ஆம் ஆண்டு ரஷ்ய அதிபராகப் பொறுப்பேற்ற விளாடிமிர் புதின் 6 ஆண்டுகளை நிறைவு செய்து தற்போது இரண்டாவது முறையாக பதவி வகித்து வருகிறார்.

2024 ஆம் ஆண்டு வரை அவரது பதவிக்காலம் உள்ள நிலையில், தனது பதவிக்காலத்தை மேலும் 12 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தார்.

இந்த சட்டத்திருத்தத்திற்கு மக்களின் ஒப்புதலைப் பெற நடைபெற்ற வாக்கெடுப்பில் 77.9% சதவீதம் பேர் புதினுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதன் மூலம் 2036 ஆம் ஆண்டு வரை புதின் அதிபராகப் பதவி வகிக்க முடியும். புதின் அவர்களின் இந்த சட்டத்திருத்தத்திற்கு 21.3% சதவீதம் பேர் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நாவலெனி இந்த சட்டதிருத்தத்திற்கும் புடின் வெற்றிபெற்றதிற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். புதின் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் பதவியில் கழிக்க முடிவு செய்து விட்டதாக குறிப்பிட்டார் மேலும் இது இந்த தேர்தல் அவர்க்கு சார்பான ஒன்றாகவே வடிவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தற்போது விளாடிமிர் புதின் அவர்களுக்கு 67 வயது ஆகிறது, இந்த சட்டதிருத்தனின் மூலமும் மற்றும் மக்களின் வாக்கு எடுப்பு மூலமும் அவர் 83 வயது வரை ரஷ்யா அதிபராக பதவியில் நீடிப்பார் என்று கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top