இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கொரோனா தடுப்பூசி;

கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இதில் சில நிறுவனங்களின் மருந்துகளின் பரிசோதனைகள் இறுதிக்கட்டதை எட்டியுள்ளன.

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளின் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இறங்கியுள்ளது. இந்நிலையில் தனியார் நிறுவனங்கள் தடுப்பூசிகளை கண்டுபிடித்தால் சாமானிய மனிதர்களுக்கு அந்த எந்த வகையில் பயன்பட்டுக்கு கிடைக்கும் என்று உறுதியாக தெரியவில்லை.

இந்நிலையில் தடுப்பு மருந்து தயாரிக்கும் போட்டியில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களும் உள்ளன. அதன்படி இந்தியாவில் தற்போதுவரை 7 தடுப்புப்பூசி மருந்துகளுக்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. அதில் இரண்டு தடுப்பூசிகள் மனிதர்கள் மீது செலுத்தி ஆராய்ச்சிசெய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அதித்துள்ளது.

அவ்வகையில் இந்தியாவின் முதல் தடுப்பூசியை புனேயை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்தது. COVAXIN என்ற இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்து அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி இந்த மாதம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை நடைபெற உள்ளது. இந்த பரிசோதனைகளை விரைவில் முடித்து ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிக்குள் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதற்கு ஐசிஎம்ஆர் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள ‘ஸைடஸ் காடிலா’ என்ற மற்றொரு இந்திய நிறுவனம் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தின் முதல்கட்ட சோதனை வெற்றியடைந்ததால், மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி இரண்டு கட்டங்களாக பரிசோதனை செய்யவும் ஒப்புதல் அளித்துள்ளது.

உலகம் முழுவதிலும் இதுவரை 17 தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படுகின்றன. ஆனால் இதுவரை எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top