தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ் – சாத்தான்குளம் கொலைவழக்கு

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் போலீசாரால் கொடூரமாக அடித்து சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டது, பின் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்தது.

மேலும், இந்த வழக்கில் கொலை குற்றவாளிகளாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு காவலர் என 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள காவலர் முத்துராஜை தேடப்படும் நபராக சிபிசிஐடி ஜஜி சங்கர் அறிவித்துள்ளார். இவ்வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட யாரும் அப்ரூவராக மாறவில்லை என்றும் ஜஜி சங்கர் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top