கடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு – கவலையை அளிக்கும் எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த 5 நாட்களில் ஒரு லட்சம் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் என்னகை 6 லட்சத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் ஒரேநாளில் 19 ஆயிரத்து 148 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதி. க்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் முதல் கொரோனா தொற்று ஜனவரி 30-ம் தேதி உறுதி செய்யப்பட்டது முதல், ஒரு லட்சம் பாதிப்புகளை எட்டுவதற்கான காலம் 110 நாட்கள் ஆனது. ஆனால் அடுத்த 44 நாட்களில் 5 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த 5 நாட்களில் மட்டுமே ஒரு லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதன் வேகத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

மொத்த பாதிப்புகளில் 70 விழுக்காடு பாதிப்புகள் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. இன்னும் சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரிசோதனை இன்னும் துரிதப்படுத்தாத நிலையில் உள்ளது.

இதேவேகத்தில் கொரோனா பரவும்பட்சத்தில் அடுத்த 3 நாட்களில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி, அதிகம் பாதிக்கப்பட்ட 3-வது நாடாக இந்தியா மாறும். மொத்த உயிரிழப்பில் 82 விழுக்காடு உயிரிழப்புகள் முதல் 5 மாநிலங்களில் மட்டுமே பதிவாகியுள்ளது.

அதேநேரத்தில் குணமடைவோர் விகிதம் 59.5 இரண்டு விழுக்காடாக அதிகரித்துள்ளது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top