காவல்துறையின் அநீதிகளை மனசாட்சியோடு சாட்சி சொன்ன ரேவதி- திரையுலக பிரபலங்கள் பாராட்டு

சாத்தான் குளம் போலீஸ் நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் போலீசாரால் விடிய விடிய கொடூரமாக அடித்து துன்புறுத்தி கொலைசெய்யப்பட்டதை மாஜிஸ்திரேட்டிடம் சாட்சியம் அளித்த பெண் தலைமை காவலர் ரேவதியை பாராட்டி இணைய தளத்தில் ஹேஷ்டேக்கை உருவாக்கி பலரும் ரேவதியை வாழ்த்தி பதிவுகள் வெளியிட்டுவருகின்றனர்.

இயக்குனர் வெற்றிமாறன் டுவிட்டர் பதிவில், “நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி, மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், துணிச்சல் மிகுந்த ரேவதி, நீங்கள் எங்களுக்கு நம்பிக்கை அளித்து இருக்கிறீர்கள். உங்களுக்கு நாங்கள் துணையாக இருப்போம்“ என்று குறிப்பிட்டு உள்ளார்.

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் பதிவில், “நீதி வென்றிட யாருக்கும் அஞ்சிடாத நெஞ்ச துணிவோடு உண்மையை உறுதியாக எடுத்து சொன்ன தலைமை காவலர் ரேவதி அவர்களுக்கு தலை வணங்குகிறேன். உங்களோடு தேசம் துணை நிற்கிறது” என்று கூறியுள்ளார்.

நடிகை ராஷிகன்னா பதிவில், “உங்கள் தைரியமும் துணிச்சலும் இன்னும் நீதியின் மீது எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. உண்மையை வெளிப்படுத்திய ரேவதிக்கு நன்றி. உங்களின் செயல் உதேவகம் அளிக்கிறது உங்களை நினைத்து எங்களுக்கு பெருமையாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில், “சாத்தான்குளம் இரட்டை கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிகொண்டிருக்கும் மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும் அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதி மன்றத்திற்கும் மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top