சீனாவுடன் 1999 வரையிலான போரில் நாங்கள் வெற்றிபெற்றோம், பாஜகவின் நிலை? பஞ்சாப் முதல்வர்!

இந்திய- சீன எல்லைப் பிரச்சனை இந்திய மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. வீரர்கள் உயிரிழந்ததையடுத்து, சீனப் பொருட்களை புறக்கணிப்போம் என்ற குரல் மக்களிடம் அதிகரித்து வருகிறது. ஆனால் பாஜக அரசோ தொடர்ந்து சீனாவுடன் கோடிக்கணக்கில் வர்த்தக ஒப்பந்தங்களை செய்துகொண்டு வருகிறது.

சீன விவராரம் தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். பாஜக அரசு எதிர்கட்சிக்கு பதில்கூறுவதை நிறுத்திவிட்டு, எல்லையில் இருக்கும் சீனர்களுக்கு தக்க பதில் அளிக்கும்படி சில கட்சிகள் கூறிவருகின்றன.

இது அரசியல் செய்வதற்கான நேரம் இல்லை என்றும், அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய-சீன எல்லை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், பஞ்சாப் முதல்வருமான அமரீந்தர் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

1948, 1965, 1971, 1999ம் ஆண்டு சீனாவுடன் சந்தித்த போர்களை தாங்கள் வென்றதாகவும், தற்போது சீன ஊடுருவலுக்கு பதிலளிப்பது பாஜக தலைமையிலான ஆட்சியின் முறை என்றும் அமரீந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் பேசும் போது :

லடாக் – கல்வான் தாக்குதல் முதல் முறையல்ல. 1960ம் ஆண்டு முதல் சீனாவால் தொடர்ந்து எரிச்சலை அனுபவித்து வருகிறோம். அக்சாய் சின் மற்றும் சியாச்சினுக்கு இடையிலான இடைவெளியை மூடுவதற்காக சீனாவின் நோக்கத்தை புரிந்து நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். சீன நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்’ என்றார்.

கொரோனா தடுப்பு பணிக்காக பிரதமர் அமைத்துள்ள PM Cares நிதியில் சீன நிறுவனங்களின் பங்களிப்பு இருக்கிறது அதை திருப்பி அளிக்க வேண்டும். இந்தியா தன்னை கவனித்துக் கொள்ள சீன உதவி தேவை இல்லை என்றும், சீன நிறுவனங்களிடம் இருந்து ஒரு ரூபாய் பணம் வந்திருந்தாலும் அதனை திருப்பி தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top