சாத்தான்குளம் கொலை; சாட்சியாக மாறிய மற்றொரு போலீஸ் அதிகாரி பால்துரை

சாத்தான்குளம் தந்தை, மகன் சிறைக்காவலில் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க மதுரை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் 5 காவலர்களை கைது செய்துள்ளது.

சாத்தான்குளம் காவல்நிலையம் உதவி ஆய்வாளராக பாலகிருஷ்ணன், மற்றும் ரகுகணேஷ், உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி கொலை வழக்குப்பதிவு செய்துள்ளது. .

இந்த வழக்கில் கொலை வழக்குப் பதிவு செய்து எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது செய்யப்ட்டார். இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் தலைமறைவாக இருந்தனர். இவர்களை தீவிரமாக தேடிவந்த சிபிசிஐடி போலீசார் நள்ளிரவில் இவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். இன்னும் ஒருவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சாத்தான்குளம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை சிபிசிஐடி சாட்சியாகிறார் என சிபிசிஐடி தெரிவித்துள்ளனர். காவலர் ரேவதி கொல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பிளீஸ் இருவரையும் காவலரகள் அடித்து கொன்ற உண்மையை கூறினார், காவல்துறைக்கு எதிராக சாட்சி அளித்த நிலையில் அவர்கள் துறையில் இருக்கும் உயர் காவல் அதிகாரி அல்லது உடன் பனி புரியும் காவலர்களிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று கூறினார்.

பின் பெண் காவலர் ரேவதி அவர்களுக்கு பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டது. தற்போது சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரையும் சாட்சியாக மாறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top