கொரோனாவை மிஞ்சும் புது வகையான பன்றிக் காய்ச்சல் – சீன ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

2009 ஆம் ஆண்டில் பரவிய H1N1 பன்றிக் காய்ச்சலின் மரபணுவைக் கொண்ட இந்த புதிய பன்றிக் காய்ச்சலுக்கு G4 என்று பெயரிடப்பட்டுள்ளது. 2011 -ம் ஆண்டு முதல் 2018 -ம் ஆண்டு வரை சீனாவில் உள்ள பத்து மாகாணங்களில் நடத்தப்பட்ட 30,000 சோதனைகளின் மூலம் ஜி4 வைரஸ் 179 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மனிதர்களுக்குத் இந்த தொற்ற பரவக்கூடும் என்று சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

2016-ம் ஆண்டில் இருந்தே இந்த தொற்றின் அறிகுறிகள் தென்பட்டதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பன்றிப் பண்ணைகள் உள்ளிட்ட இடங்களில் வேலை செய்வோரில் 10.4 சதவீதம் பேருக்கு ஏற்கனவே இதன் பாதிப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு ஜி4 பரவும் என்பதற்கான ஆதாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்த தொற்றின் அறிகுறி உடல்வெப்பம் அடைதல், காய்ச்சல், இருமல் மற்றும் சளித்தும்மல் என்று தெரிவித்துள்ளனர்.

மக்கள் தொகையில் 4.4 சதவீதம் பேருக்கு ஜி4 பரவி இருக்கலாம் என்று கணித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் பன்றிப் பண்ணைகள் உள்ளிட்ட இடங்களில் வேலை செய்வோரை கண்காணிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

தற்போது, பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவிவருவதாகவும் இன்னும் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் ஏற்படவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் இந்த புது வைரசுக்கு மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவதற்கான தன்மையை வளர்த்துக்கொண்டு விரைவில் பரவவும் செய்யும் என்றும் அது கொரோனா போன்ற ஒரு பெரும் தொற்றாக மறவாய்ப்புகள் அதிகம் என்றும் கூறுகின்றனர் சீன விஞ்ஞானிகள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top