இன்று தமிழகத்தில் புதிதாக 3,882 பேருக்கு கொரோனா உறுதி – 63 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும் தொற்று பரவுவது அதிகரித்து வருகிறது.

இன்று புதிதாக 3,882 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து நாள்தோறும் 3 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. ஜூலை மதத்தின் மத்தியில் கொரோனா தொற்று உடையவர்களின் எண்ணிக்கை சென்னையில் மட்டும் 1.5 லட்சத்தை தேடும் என்று கூறுகின்றனர்.

இன்று 2,852 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 52,926 பேர் குணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று 63 பேர் (26 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள்) உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 1,264 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 31,521 மாதிரிகளும், 30,571 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top