கொரோனா வைரஸ் முடிவதற்கான அருகில் கூட செல்லவில்லை: உலக சுகாதார அமைப்பு கவலை

கொரோனா வைரஸ் முடிவு பெறவில்லை. இனிமேல் தான் உச்சத்தை அடையும், பரவல் முடிவதற்கான அருகில் கூட நெருங்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது, “ கொரோனா வைரஸால் பெரும்பாலான மக்களை பாதிக்கும், வைரஸ் இன்னும் நிறைய இடங்களில் பரவும். நாம் தற்போது இந்த வைரஸ் முடிவு பெற வேண்டும் என்று நினைக்கிறோம். நாம் அனைவரும் வாழ்க்கையைத் தொடங்க நினைக்கிறோம். ஆனால், நிதர்சனம் என்னவென்றால் கரோனா வைரஸ் பரவல் முடிவதற்கான அருகில் கூட நெருங்கவில்லை. கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது” என்று தெரிவித்தார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று உடையவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்துவது மட்டும் போதாது, அவர்கள் உடன் தொடர்பில் உள்ளவர்களையும் (contact tracing) கண்டு அறிந்து அவர்களையும் தனிமை படுத்த வேண்டும். சில நாடுகள் தொற்று பரப்புவர்களை கண்கணிப்பது கடினமாக உள்ளது என்று கூறுகின்றனர், இன்னும் சொல்லப்போனால் வளர்ந்த நாடுகளும் கூட இப்படி கூறுகின்றன. ஆனால் இது உண்மை இல்லை இது சாத்தியமான ஒன்றே நோய் தொற்று உள்ளவரை கண்காணித்து தனிமை படுத்துவது (contact tracing) கடினம் என்று கூறுவது முற்றிலும் நொண்டி சாக்கு தானே தவிர வேறு ஒன்றுமில்லை.

இந்தச் சூழலில் டெக்ஸாமெதாசோன் ஸ்டெராய்ட் மாத்திரைகள் சுவாசக் கருவி உதவியுடன் இருக்கும் நோயாளிகளில் 35% பேரையும், கூடுதல் பிராணவாயு தேவைப்படும் கரோனா நோயாளிகளில் 20% பேரையும் மரணத்திலிருந்து தடுத்துள்ளதாக இங்கிலாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

மேலும், கொரோனா வைரஸை அழிப்பது தொடர்பாகக் கண்டறியப்பட்டுள்ள ஆராய்ச்சிகளைப் பற்றி மதிப்பீடு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இந்த வாரம் நடைபெறவுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top