பீகாரில் திருமணத்தில் கலந்துகொண்ட 111 பேருக்கு கொரோனா உறுதி… மணமகன் மரணம்!!

பீகார் மாநிலம் பாட்னாவின் பாலிகஞ்ச் நகரில் ஜூன் மாதம் 15ம் தேதி ஒரு திருமண விழா நடைபெற்றது இதில் 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். 50 நபர்களுக்கு மேல் திருமணங்களில் பங்கேற்க கூடாது என அரசு விதிமுறைகள் விதித்துள்ளது. ஆனால், திருமணம் முடிந்து 2 நாட்களில் மணமகன் திடீரென இறந்துவிட்டார். கொரோனா பரிசோதனை செய்யப்படாமலே அவரது உடலுக்கு உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்து உடனடியாக அடக்கம் செய்துவிட்டனர்.

அதேசமயம், இறந்துபோன நபரின் உறவினர்கள் சிலருக்கு கொரோனா அறிகுறியுடன் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனையில் உறவினர்கள் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடித்தது.

திருமணத்தில் கலந்து கொண்ட அனைவர்க்கும் பரிசோதனை நடத்தப்பட்டதில் நூற்றுக்கு (100) மேற்பட்டோர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூன் 24 முதல் 26ம் தேதி வரை சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. திருமண விழா மற்றும் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் என சுமார் 400 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 86 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 111 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே மணமகனுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். மணமகனின் குடும்பத்தார் கட்டாயப்படுத்தி திருமண சாடுங்குகளில் பங்கேற்கும் படி அவரை வறுபுறுத்தியுள்ளனர். திருமண நாளன்றும் மிகவும் சோர்வுடன் காணப்பட்டுள்ளார். ஆனால், அவரது குடும்பத்தினர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், மருந்து மாத்திரைகள் கொடுத்து திருமண சடங்குகளை செய்ய வைத்தாக கூறப்படுகிறது.

பீகார் மாநிலத்தில் இதுவரை 10043 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 67 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top