தந்தை, மகன் “லாக்அப்” மரணம் – சாத்தான்குளத்தில் சிபிசிஐடி தீவிர விசாரணை

சாத்தான்குளத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இருவரும் போலீசாரால் விடியும்வரை அடித்துக் கொல்லப்பட்டு இருப்பதாக தெரியவந்து இருக்கிறது .

இதுதொடர்பான முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் மாஜிஸ்திரேட் அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தான்குளம் காவல்நிலையம் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சிபிசிஐடி டி.எஸ்.பி அனில்குமார் விசாரணை மேற்கொண்டார். ஜெயராஜ் கடை அமைந்துள்ள பகுதியிலும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், வியாபாரிகள் தாங்களாக முன்வந்து நடந்த சம்பவத்தை அதிகாரிகள் விசாரணையில் விவரித்தனர்.

காவல் ஆய்வாளர் உலக ராணி ஜெயராஜ், பென்னிக்ஸ் இல்லத்திலும், கைது செய்யப்பட்ட இடத்திலும் விசாரணை நடத்தினார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் பிறைசந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

காவல்நிலையத்தில் போலீசாரால் அழிக்கப்பட்ட சிசிடிவி பதிவுகளை மீட்கும் பணியில் வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விசாரணை நடைபெறும் இடங்கள் அனைத்தும் சிபிசிஐடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் சாட்சிகளிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். காவல் நிலையத்தில் சிபிசிஐடி விசாரணை நடைபெறுவதால், மீதமுள்ள சாட்சிகளிடம் விருந்தினர் மாளிகையிலேயே விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top