தமிழகத்தில் 90 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – நேற்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் நேற்று கொரோனா வைரஸ் தொற்று புதிதாக 3,943 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம்.

சென்னையில் 2,393 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 58,327 ஆக உயர்ந்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 38 ஆயிரத்து 889 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,201 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 50 ஆயிரத்து 74 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top