என்.எல்.சியில் இரண்டாவது வெடித்து விபத்து – 6 ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது 2-வது சுரங்கத்தில் அதிக கொதிகலன் கொண்ட பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், 2வது சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 22 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து கடலூர், திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டுச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

எஞ்சிய 17 தொழிலாளர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்படும் என்.எல்.சி. அனல் மின் நிலையத்தின் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், கொதிகலன்கள் பழுதடைந்து அவ்வப்போது இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இதேபோல் கடந்த மாதம் 7-ஆம் தேதி இதே அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top