நவம்பர் மாதம் வரை இலவச ரேசன், பிரதமர் மோடி பொருளாதாரம் குறித்து பேசவில்லை

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இது பல்வேறு கட்டமாக கட்டங்களாக நீட்டிக்கப்பட்டது. ஒவ்வொரு முறை ஊரடங்கு நீட்டிப்பின்போதும், மக்களின் தொழில் மற்றும் வேலைகள் கடுமையாக பாதிப்பு அடைந்துவிட்டது. பலர், வேலையில்லாமல் அரசு கண்டுகொள்ளாததால் தற்கொலை செய்து வருகின்றனர். பசியால் மக்கள் வாடிவருவது அதிகமாகியுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். விரைந்து மோடி அரசு செயல் பட வேண்டும் இல்லையேல் மக்கள் மிகமோசமாக பாதிக்கப்படுவார்கள் என்று பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர்.

அதேசமயம், லடாக் மோதலில் இந்திய ராணுவவீரர்கள் மரணம் மற்றும் சீன உடன் பொருளாதார ஒப்பந்தம் பின், சீன செல்போன் செயலிகளுக்கு தடை போன்ற முக்கியமான நிகழ்வுகளால் அரசியல் அரங்கில் பெரும் பாதிப்பும் அச்சுறுத்தலும் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்டுள்ள ஊரடங்கால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.. பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு குறைவாக உள்ளது நமது நாடு சிறப்பாக செயல்படுகிறது.

மழைக் காலம் தொடங்க உள்ள சூழலில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். இந்த காலத்தில் சளி காய்ச்சல் வரும் என்பதால் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். தற்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், முன்பைவிட அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இப்போது செய்யக்கூடிய சிறிய தவறுக்கு கூட மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடலாம். அரசின் விதிமுறைகளை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

நாட்டில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது என்பதற்காக விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு 5 கிலோ கோதுமை வழங்கப்பட்டுள்ளது.

ஏழைகளுக்ககு 1.75 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ், நவம்பர் மாதம் வரை மக்களுக்கு இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும். கோதுமை அல்லது அரிசி 5 கிலோ அளவில் இலவசமாக வழங்கப்படும். ஒரு கிலோ கடலைப்பருப்பும் வழங்கப்படும். இதற்காக 90 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். அதேசமயம் நாட்டின் பொருளாதார சூழலை மேம்படுத்தவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top