தனுஷ் இயக்கும் படம் தமிழ் சினிமாவின் பாகுபலியாக இருக்கப்போகிறது – ஷான் ரோல்டன்

தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் தொடர்ந்து வணிக ரீதியாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் நடிகர் தனுஷ். திரைத்துறையில் நடிகர், பாடகர் என்பதை தாண்டி தற்போது இயக்குனராக ஆசையில் உள்ளார்.

இந்நிலையில், ருத்ரன் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் தனுசுடன் நாகர்ஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ், அனு இமானுவேல் உள்ளிட்ட பலரும் நடிக்க ஒப்பந்தமாகினர். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த இப்படம், ஷுட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே பைனான்ஸ் பிரச்சனை
என்று காரணம் கூறி கிடப்பில் போடப்பட்டது.

இதனிடையே இப்படத்தை தனுஷ் மீண்டும் தொடங்க உள்ளதாகவும், அப்படத்தின் பாதி பகுதிகளை தனுஷின் சகோதரர் செல்வராகவன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில், அப்படம் குறித்து இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: தனுஷ் இயக்கும் படத்தின் பணிகளில் இன்னும் முழுமையாடவில்லை, வேறு எந்த அப்டேட்டும் எனக்கு தெரியாது. ஆனால் இப்படம் முடிவுபெற்றால், கண்டிப்பாக இது தமிழ் சினிமாவின் திருப்புமுனை படமாக அமையும். பாகுபலி, தெலுங்கு சினிமாவின் போக்கை மாற்றியதைப் போலவே, இந்த படம் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றும் என்று நான் நம்புகிறேன்.

தனுஷ் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்பது அனைவர்க்கும் தெரியும், அதேபோல் அவர் ஒரு சிறந்த இயக்குனரும் கூட, அதை இந்த படத்தின் மூலம் விரைவில் அனைவரும் பார்ப்பீர்கள். அவரது கதையில் ஏராளமான ஆச்சரியங்கள் உள்ளன” என்று ஷான் ரோல்டன் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top