மோடியின் பாஜக ஆட்சியில் சீன பொருட்களின் இறக்குமதி மிகஅதிகம் – ராகுல் காந்தி கடும்தாக்கு

இந்தியா-சீன எல்லையான லடாக்-கல்வான் பகுதியில் நடந்த மோதலில் இந்தியா ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற நாடு முழுவதும் கோரிக்கை அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி மக்கள் புறக்கணிப்பதை தாண்டி, பாஜக அரசு ஏன் சீனா அரசு உடனான வர்த்தகத்தை நிறுத்திக்கொள்ள கூடாது இதுவே சீனாவுக்கு பெரிய பதிலடியாக அமையும் என்றும், அப்படி செய்தல் மக்கள் வாங்க வேண்டியது இருக்காது என்று கூறுகிறார்கள்.

ஆனால் சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், அதுகுறித்து டிவிட்டரில் வரைப்படம் மூலம் ராகுல் காந்தி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் லட்சிய திட்டமான மேக் இன் இந்தியா திட்டத்தை விமர்சித்துள்ள அவர் ‘இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் என பாஜக சொல்கிறது, ஆனால் சீனாவில் இருந்து வாங்குகிறது’ என்று கூறி உள்ளார்.

அத்துடன், மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின்போது சீனப் பொருட்கள் இறக்குமதி சதவீதத்தை ஒப்பீடு செய்து வரைபடத்தையும் இணைத்துள்ளார்.

அதில், 2008 முதல் 2014 வரை, காங்கிரஸ் ஆட்சியில் சீனாவிலிருந்து இறக்குமதி 14 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது எனவும். அதே நேரத்தில் 2014 முதல் 2020ஆம் ஆண்டு வரை மோடியின் பாஜக தலைமையிலான என்டிஏ ஆட்சியின் போது, சீனப்பொருட்கள் இறக்குமதி 18 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்திருப்பதாக ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top