இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி – ஐசிஎம்ஆர் ஒப்புதல்

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த வைரசுக்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் சில நிறுவனங்களின் மருந்துகளின் பரிசோதனைகள் இறுதிக்கட்டதை எட்டியுள்ளன. ஆனால் இதுவரை எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

தனியார் நிறுவனங்கள் கண்டுபிடிக்கும் மருந்துகள் விலைஉயர்ந்ததாக இருக்கும் பட்சத்தில் சாமானிய மனிதர்களுக்கு அது சென்று முடியுமா என்ற எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் புனேவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு COVAXIN என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மருந்து பல்வேறுகட்ட சோதனைகளுக்கு பிறகு, விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

விலங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டதில் வெற்றியடைந்ததால், இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது.

COVAXIN தடுப்பூசியை அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் முழுதிறன் குறித்து சோதனையில் தெரியவரும் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை தொடங்க உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top