தந்தை, மகன் உயிரிழப்பு; தடையங்கள் அழிக்கப்படுவதற்குள் சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் மிக கொடூரமாக தாக்கப்பட்டு பின் லாக்அப் மரணம் அடைந்தது குறித்த வழக்கை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவர் அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்த வழக்கைவிசாரித்துவருகிறது

“இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்றம் தாமதத்தை விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கி காத்துள்ளனர். ஆகவே, ஒரு நொடி கூட வீணாகக்கூடாது.

சிபிஐ விசாரணையை தொடங்குவதற்குள் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சிபிஐ வசம் ஒப்படைக்கபப்டும் வரை, நெல்லை சரக டிஐஜி இந்த வழக்கு விசாரணையை ஏற்க இயலுமா? அல்லது நெல்லை சிபிசிஐடி உடனடியாக வழக்கு விசாரணையை கையில் எடுக்க இயலுமா? என்பது குறித்து தகவல் பெற்று மதியம் தெரிவிக்க வேண்டும்.

முதல்நிலை உடற்கூறு பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. அதனடிப்படையில் அதிக காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டிருப்பதால் வழக்கு பதிவு செய்ய போதிய முகாந்திரம் உள்ளது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மதியம் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தந்தை மற்றும் மகன் உயிரிழந்த வழக்கை டிஜிபியின் உத்தரவிற்காக காத்திருக்காமல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இன்றிலிருந்தே உடனடியாக விசாரணையை கையிலெடுக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top