சாத்தான்குளம் மரணத்திற்கு ரஜினி, அஜித், விஜய் குரல் இல்லை என்றால் இனி எதற்கும் தான் பேசுவார்கள்?

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் காவல்துறையினர் அடித்து துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் தங்களது எதிர்ப்புகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஜனநாயக வழியில் அமைதியாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை காவல் துறை மிகக்கொடூரமாக அடித்தது, உழைக்கும் மக்களின் ஆட்டோக்களுக்கு தீவைத்த விடீயோக்கள் எல்லாம் வெளியே வந்த வண்ணம் இருந்தது. பின் ஸ்டெர்லைட்டு ஆலையின் மாஸ் காற்றுக்கு எதிராக மக்கள் ஸ்டெர்லைட்டு ஆலையை மூடும்படி அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர் அப்போதும் காவல் துறையினர் மக்களை அடித்தது, 13 அப்பாவி தமிழர்களை காவல்துறை சுட்டு கொன்றது.

காவல் துறை மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு நிறுவனமாகும். மக்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டவர்களை இதற்கு முன்னதாக இதுபோன்ற அத்து மீறல்களில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு எந்த ஒரு அதிகபட்ச தண்டனையும் கிடைக்கவில்லை என்பது தான் கொடுமை.

இந்த வழக்கில் அப்படி நடக்கக் கூடாது என்பதற்காக மக்கள் தற்போது போராடி வருகின்றனர், இந்த சூழ்நிலையில் சினிமாவில் உள்ள நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் குரல் கொடுக்காமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

இதற்கு முன்னதாக இதுபோன்ற அத்து மீறல்களில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு எந்த ஒரு அதிகபட்ச தண்டனையும் கிடைக்கவில்லை என்பது தான் கொடுமை. இந்த வழக்கில் அப்படி நடக்கக் கூடாது என்பதற்காக மக்கள் தற்போது போராடி வருகின்றனர், இந்த சூழ்நிலையில் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் குரல் கொடுக்காதது மிகவும் வேதனை அளிக்கிறது.

அதாவது நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்றவர்கள் தற்போது வரை எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. நடிகர் சூர்யா அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுபோன்ற சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தால் மட்டுமே நாளை அரசியலில் சாதிக்க முடியும். தற்போது குரல் கொடுக்காதது பலரின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இதற்கு முன்னதாக போலீஸ் மக்களுக்கு எதிராக நடத்திய தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்திற்கு ரஜினிகாந்த் சமூக விரோதி ஊடுருவியதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்று சொல்லிருப்பார். அப்பொழுது மட்டும் போலிசுக்கு ஆதரவா ரஜினி பேசுவார். காவல்நிலையத்தில் சிறையில் நிகழ்ந்த இரு மரணங்கள் குறித்து தற்போது வரை எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. பாஜகவின் ராஜா அவர்கள் இந்த சமைப்பதை பின் இருந்து யாரோ சாதி செய்கிறார்கள் என்று கூறுகிறார். ஏன் ரஜினியம் பாஜகவின் ராஜாவும் ஒரே மாதிரியான நிலையடை எடுக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

நடிகர் விஜயின் தரப்பில் இருந்து தற்போது வரை எந்த ஒரு அறிக்கையும் விடவில்லை. மக்கள் பெயரில் இயக்கம், மன்றம் என ஆரம்பித்து மக்களுக்கு பிரச்சனை வரும்போது அமைதியாக இருப்பது அநியாயம் என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர். நடிகர் அஜித்தும் தற்போது வரை எந்த ஒரு அறிக்கையும் விடவில்லை. கோடிக்கணக்கில் சம்பளம் பெரும் இவர்கள் படத்தை வெற்றியடைவாய்ப்பது இந்த தமிழ் மக்கள் தான்.ஆனால் இவர்களுக்கு தற்போது நடந்த பிரச்னையை எதிர்த்து ஒரு கண்டனம் கூட தெரிவிக்காமல் இருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்கிறார்கள் மக்கள்.

மக்களுக்கு பிரச்சனைக்கு கொடுக்காமல் நாளை போலிசுக்கு ஏதேனும் பிரச்சனை வந்தால் உடனே குரல் கொடுத்தாலோ மக்கள் எதிர்ப்புக்கு இவர்கள் ஆளாவார்கள் என்பதில் ஐயமில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top