பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாளை நாடுமுழுவதும் காங்கிரஸ் போராட்டம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகக்குறைவாக இருந்தபோதிலும்,பெட்ரோல், டீசல் மீது உற்பத்தி வரியை உயர்த்தி மக்களிடம் இருந்து அதிகமான லாபத்தை மத்திய அரசு ஈட்டிவருகிறது.

கடந்த 7-ம் தேதி முதல் தொடர்ந்து 21- நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இதுவரை கடந்த 21 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.12 உயர்ந்துள்ளது, டீசல் விலை லிட்டருக்கு ரூ.11.01 அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸ் லாக்டவுனால் ஏற்கெனவே மக்கள் வருமானமில்லாமல் தொழில் முறையாக நடக்காமல் மக்கள் பெரிய துன்பத்துக்கு ஆளாகியுள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அவர்களை மேலும்வேதனைப்படுத்தும், இது மக்களிடம் கொள்ளையடிக்கும் செயல் என்றும் ஆதலால் விலை உயர்வை திரும்பப்பெறக்கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த வாரம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன்பின்பும் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்தது.

இந்த விலை உயர்வைக் கண்டித்து நாளை திங்கள் காலை 11 மணி முதல் 12 மணிவரை நாட்டில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தர்ணா போராட்டம் நடத்தப்படும். சமூக விலகலைக் கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு அறிவிப்புகள் கூறப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப்பெற உத்தரவிடக்கோரி, காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் சார்பில் நாளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச்சந்தித்து கோரி்க்கை மனு அளிக்கப்படும்.

அதுமட்டுமல்லாமல் சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் “பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்துபேசுங்கள்” என்று பிரச்சாரம் நடத்தப்படும். இதில் விவசாயிகள், டாக்ஸி, லாரி உரிமையாளர்கள், ஓலா, உபர் ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், சமானிய மக்கள் விலை உயர்வால் சந்திக்கும்பிரச்சினைகள் பேசப்படும்

இவ்வாறு வேணுகோபால் தெரிவித்தார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top