உலகளவில் ஒரு கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – முடிவு எப்போது?

சீனாவின் ஊஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று, உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவியது. அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 25 லட்சத்து 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தவறான முன்னேற்பாடுகளால் தான் அமெரிக்கா மக்களுக்கு நோய் தோற்று அதிகரித்தது என்று ஆய்வாளர்கள் மற்றும் சில அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவிக்கின்றனர். 1 லட்சத்து 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அந்நாட்டில் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலில் கடந்த சில நாட்களில் மட்டும் லட்சக்கணக்கானோரை கொரோனா தாக்கி வருகிறது. இதற்கு காரணமும் பிரேசில் நாட்டின் ஜனாதிபதி போல்சோனாரோவின் தவறான முடிவுகளால் தான் என்று கூறப்படுகிறது மேலும் இவர் அமெரிக்காவின் வழியையே பின்பற்றினர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 லட்சத்து 15 ஆயிரத்தை கடந்துள்ளது. 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் கொரோனா தாக்குதலுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 27 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் 5 லட்சத்து 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பிரிட்டனில் சற்று ஓய்ந்திருந்த தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அந்நாட்டில் 3 லட்சத்து 10 ஆயிரம் பேர் கொரோனாவின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். ஸ்பெயினில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது.

பெரு, சிலி, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் உலகில் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மெக்சிகோவிலும் பாகிஸ்தானிலும் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 54 லட்சத்தை கடந்துள்ளது.

சீனாவில் கட்டுப்படுத்தாக கூறப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது. இது சீனாவில் கொரோனாவின் இரண்டாவது அலை என்று கூறுகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top