நேற்று ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு புதிதாக பாதிப்பு – இந்தியாவில் அதிதீவிரமடையும் கொரோனா

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. நோய் தொற்று அதிகமாக பரவுகிறது என்று கூறிய அரசு, கடந்த சில மாதங்களாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தின, மேலும் கொரோனவுடன் வழபழகி கொள்ளுங்கள் என்றும் அரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது. இன்று காலை 8 மணி நிலவரத்தின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 906 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்னிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 857 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 410 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 95 ஆக அதிகரித்துள்ளது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே கொரோனாவால் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆனாலும், கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 13 ஆயிரத்து 832 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 9 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top