விஷாலின் “சக்ரா” படத்தின் த்ரில்லிங் ட்ரெய்லர் ரிலீஸ் – இரும்புத்திரையை மிஞ்சுமா?

விஷால் சக்ரா படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது. இதற்கு முன்பு விஷால் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் இரும்புத்திரை படத்தில் நடித்திருந்தார். அது முழுக்க முழுக்க சைபர் கிரைம் பற்றிய த்ரில்லர் படம் தான். அது போலவே சக்ரா படமும் ஆன்லைன் ஹேக்கர்கள் கதைக்களத்தை மையமாக கொண்ட படமாக அமைந்துள்ளது.

எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ள சக்ரா படத்தில் விஷால் ராணுவ வீரராக நடித்துள்ளார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா, கே. ஆர். விஜயா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் சக்ரா படத்தில் நடித்துள்ளனர்.

4-கு மொழியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் ட்ரைலர்களை நடிகர் கார்த்தி, ஆர்யா தமிழ் டிரைலரை வெளியிட்டனர். தெலுங்கு டிரைலரை நடிகர் ராணாவும், மலையாளம் டிரைலரை மோகன் லாலும் வெளியிட்டனர். கே.ஜி.எஃப் நடிகர் யஷ், கன்னட டிரைலரை வெளியிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top