ஜம்மு காஷ்மீர் ஹன்லேயில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்- அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது

182503559

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹன்லே பகுதியில் இன்று பிற்பகல் நிலஅதிர்வு உணரப்பட்டது. ஹன்லேயில் இருந்து வடகிழக்கில் 332 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகாக பதிவாகியிருந்தது.

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தான முழுமையான தகவல் வெளியாகவில்லை.

நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானிலும் உணரப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் 2வது முறையாக இந்த பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று கார்கில் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top