கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் சீனாவின் முதலீடு 12 மடங்கு உயர்வு – குளோபல் டேட்டா

இந்தியாவில் புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களில் சீனாவின் முதலீடு கடந்த 4 ஆண்டுகளில் 12 மடங்கு அதிகரித்துள்ளது. 2016ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்களில் சீனாவின் முதலீடு இரண்டாயிரத்து 881 கோடி ரூபாயாக இருந்தது.

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் சில பகுதிகளில் மக்கள் சீன பொருட்களை உடைத்து இனி நங்கள் சீனப்பொருட்களை வாங்கப்போவது இல்லை என்று எதிர்ப்பு குரல் எழுப்பினர்.

ஆனால் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள கைபேசி, உணவு டெலிவரி செய்யும் நிறுவனம், தொலைக்காட்சி சாதனங்கள், மின்சாதனங்கள் என அனைத்தும் சீனாவின் பொருட்களே தவிர்க்க முடியாத சந்தையாக உள்ளது. இருந்து மக்கள் பொருட்களை வாங்க வேண்டாம் என்றும் குறிப்பாக பாஜகவை சேர்ந்தவர்களே இதை செய்துவருகின்றனர்.

இன்னும் சிலர் மக்கள் தங்கள் கைசெலவில் வாங்கிய பொருளை உடைப்பது மேலும் மக்களுக்கு தான் நஷ்டம் ஏற்படும், அதனால் இந்திய அரசு ஏன் சீனாவிடம் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தை கைவிடக்கூடாது என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

ஆனால் உண்மைநிலையோ வேறுவிதமாக உள்ளது ஆண்டுக்கு ஆண்டு சீன முதலீடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2019ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்களில் சீன நிறுவனங்கள் 34 ஆயிரத்து 788 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக குளோபல் டேட்டா என்னும் தரவுத்தளம் தெரிவித்துள்ளது.

அலிபாபாவும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களும், பேடிஎம், ஸ்னாப்டீல், பிக்பேஸ்கட், சொமேட்டோ ஆகியவற்றில் 19 ஆயிரத்து 663 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. டென்சென்ட் உள்ளிட்டவை ஓலா, ஸ்விக்கி, ஹைக், டிரீம்11, பைஜுஸ் ஆகியவற்றில் 18 ஆயிரத்து 150 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.

இருப்பினும், சமீபத்திய எல்லை மோதலால் இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு கொள்கையை இறுக்குவது சீன முதலீட்டாளர்களுக்கு அவர்களின் முதலீட்டை அடைவதற்கு ஒரு சிக்கலாக அமையும்.

ஆயினும் கூட, இது ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே, இரு நாடுகளுக்கும் இடையிலான குறிப்பிடத்தக்க இருதரப்பு முதலீட்டு உறவுகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் மட்டுமே நீண்டகால தாக்கத்தை உணர முடியும், என குளோபல் டேட்டா கூறி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top